உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! கடும் கோபத்தில் ஜெலன்ஸ்கி
உக்ரைனின் தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியாவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை இன்று(09.04.2023) நடத்தியுள்ளது.
இதன்போது ரஷ்ய ஏவுகணைகள் ஒரு வீட்டை தாக்கியதில், 50 வயதுடைய தந்தையும் அவரது 11 வயது மகளும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் மாநில அவசர சேவை தகவல்
இது தொடர்பில் ஊடகங்களுக்கு உக்ரைனின் மாநில அவசர சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
“ரஷ்யா ஜபோரிஜியாவில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி மற்றொரு உக்ரைனிய குடும்பத்தை கொன்றுள்ளது.
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான ஜபோரிஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் நகரிலுள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்
மேலும் இடிந்த கட்டிடத்திற்குள் சிக்கி 50 வயதுடைய தந்தையும் அவரது 11 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் இறந்தவரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யர்கள் இரவில் தாக்கியபோது அவரது மூத்த மகள் வீட்டில் இல்லை.” என்று மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் குடியிருப்பு கட்டிடத்தை தாக்கியதாகவும் அருகிலிருந்த வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.