உக்ரைனில் அப்படி என்னதான் நடக்கிறது! பின்வாங்கி ஓடுகின்றனவா உக்ரைன் படைகள் (Video)
உக்ரைன்-ரஷ்யா இடையே இருக்கும் பிரச்சினை தான் என்ன?
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றங்கள் என்பது இப்போது தொடங்கிய ஒன்றல்ல. 2014 ல் உக்ரைனின் ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்ட்டர் யானுகோவிச்சை புரட்சியில் இருந்து வெளியேற்றியபோது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தது.
இந்த இரண்டு நாட்டுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. இதற்கு காரணம், நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் நினைப்பதுதான். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவிக்க தொடங்கியது.
இந்த மோதலில் இதுவரை ரஷ்யா சாதித்தது தான் என்ன?
உக்ரைன்-ரஷ்ய போரின் களநிலவரங்களை மேற்குலக ஊடகங்கள் மிகைப்படுத்தல்கள் இல்லாமல் அப்படியேதான் வெளியிடுகின்றனவா?
உக்ரைனின் பக்முட் நகரை ரஷ்யா கைப்பற்றி வருவது உண்மையில் உக்ரைனுக்கு ஒரு பாரிய இழப்பா?
உக்ரைன்-ரஷ்ய போரை பொருத்தவரை போர் தொடங்கிய நாள்முதல் பாரிய இழப்புகளை சந்திப்பது ரஷ்யா தான் என்பது மறுக்க முடியாத உண்மை. அவை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,