ரஷ்யா ஈரானிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டுமென ஈரானிய அரசாங்கத்திடம் ரஷ்யா அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உரையாடலின் போது, தற்போதைய மோதல்களை உடனடியாக நிறுத்தி, அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுகளுக்கு நகர வேண்டும் என்ற அவசரத் தேவையை லாவ்ரோவ் வலியுறுத்தியதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானின் அணு உள்கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் ஏற்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் கிரெம்லின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானின் புஷெர் அணு மின்நிலையம் அருகே மேற்கொண்ட தாக்குதல்கள் “மிகவும் ஆபத்தானவை” என கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, இந்த மோதல் காஸ்பியன் கடல் பகுதிக்கு விரிவடையும் அபாயம் இருப்பதாகவும், இரு தரப்பும் கவலை வெளியிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam