நடுவானில் அமெரிக்க போர் விமானம் அருகே பறந்த ரஷ்ய விமானத்தினால் பரபரப்பு
நடுவானில் அமெரிக்க போர் விமானம் அருகே பறந்த ரஷ்ய விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷ்யா ஆதரவு வழங்கி வருவதுடன்,சிரிய குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியுள்ளது.
சிரிய வான்பரப்பில் பரபரப்பு
இந்நிலையில், தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதலை நடத்தி வருவதுடன், சிரியாவின் வான்பகுதியில் ரோந்து பணியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சிரியாவின் வான்பரப்பில் நேற்று அமெரிக்க போர் விமானமும், ரஷ்ய போர் விமானமும் அருகருகே பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எம்.சி-12 ரக போர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ரஷ்யாவின் சு-35 ரக போர் விமானம் அதன் அருகே மோதும் வகையில் பறந்து பின்னர் இரு போர் விமானங்களும் விலகி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |