பதற்றத்திற்கு மத்தியில் இலங்கை வரும் ரஷ்யா பிரதி வெளியுறவு அமைச்சர்
இலங்கைக்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையிலான 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளில் பங்கேற்பதற்காக, ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த பயணம் மார்ச் 31, 2026 மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்திற்கான நோக்கம்
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்தாய்வுகளின் போது, அரசியல் ஈடுபாடு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுலா, எரிசக்தி, மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து அதிகாரிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8