தாக்குதலை உடன் நிறுத்த வேண்டும்: ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
உக்ரைனில் உள்ள வைத்தியசாலைகளின் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்துக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளதுடன், இதற்கு எதிராக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.
சுகாதாரத்துறை மீதான தாக்குதல் இதேவேளை, உக்ரைனில் சுகாதார நெருக்கடி தொடர்வது குறித்தும் தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவி
ரஷ்யப் படையெடுப்பு அதற்கு முக்கியமான காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
14 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான உக்ரைனின் தூதுவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் யுத்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை உக்ரைனின் சுகாதாரக் கட்டமைப்புக்கள் மீது 900 க்கும் மேற்பட்ட தடவை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |