உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி

Russo-Ukrainian War Ukraine Russia
By Amal Aug 29, 2026 09:00 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தையும் அடுத்து, குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா (Myla) எனும் இடத்தில் அமைந்துள்ள குறித்த கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலால் அங்கு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடுமையான விசாரணைகள்

உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயரான தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி | Russian Attack Ukraine 37 Killed Depot Explosion

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிர்ச்சேதங்களுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, இது தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமரும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனைக் இலக்கு வைத்து ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகளையும் 267 ட்ரோன்களையும் ஏவித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளிலும் உக்ரைன் பதிலடித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சிம்பாப்வேயில் ஏற்பட்ட வீதி விபத்தில் 27 பேர் பலி

சிம்பாப்வேயில் ஏற்பட்ட வீதி விபத்தில் 27 பேர் பலி

கொழும்பில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு - மர்ம கும்பலால் கடத்தப்பட்ட பெண் - பொலிஸார் துப்பாக்கி சூடு

கொழும்பில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு - மர்ம கும்பலால் கடத்தப்பட்ட பெண் - பொலிஸார் துப்பாக்கி சூடு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US