உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள்
தென் கொரிய எல்லைக்குள் நுழைந்த போர் விமானங்கள் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்களை வீசும் திறன் கொண்ட ஆறு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தென் கொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளது.
இதனால் தென் கொரிய இராணுவத்திற்கு தனது போர் விமானங்களை அனுப்பவேண்டிய பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பாதுகாப்பு
சீன போர் விமானங்கள் நேற்று கொரிய வான் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்ததாக தென் கொரியா தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சீன விமானங்கள் வெளியேறியதும், அணு ஆயுதம் வீசும் திறன் கொண்ட ரஷ்யப் போர் விமானங்கள் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.
இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நேரும் முன் அதைத் தவிர்க்கும் வகையில் தனது போர் விமானங்களை இராணுவம் அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு பதிலடி
இதேவேளை அணு ஆயுதம் வீசும் திறன் கொண்ட சீன போர் விமானங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாக ஜப்பானும் தெரிவித்துள்ளது.
நேற்று காலை சீன போர் விமானங்களும் ரஷ்ய போர் விமானங்களும் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து பின் திரும்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், அமெரிக்கா தனது ஆயுத பலத்தைக் காட்டும் வகையில் அணு ஆயுத விமானங்களைக் கொண்டு போர் ஒத்திகை நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரஷ்யாவும் சீனாவும் இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
