படுகொலை முயற்சியிலிருந்து 6 ஆவது முறையாக தப்பிய ரஷ்ய ஜனாதிபதி-உலக செய்திகள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார் என்றும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் நடைபெறும் போரில், ரஷ்யாவின் இராணுவ இழப்புகளை மேற்கோள்காட்டி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பதவி விலகுமாறு அந்நாட்டு அரசியல்வாதிகள் குழுவினர் கடந்த ஒரு வார காலமாக கோரி வருகின்றனர்.
உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள இழப்புகள், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம், ஆகிய பல காரணஙக்ளை சுட்டிக்காட்டி புடினை பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், புடின் சென்ற சொகுசு காரின் இடதுபக்க முன்பகுதி சக்கரத்தின் மீது சில நபர்கள் தாக்கியுள்ளனர். உடனடியாக காரிலிருந்து புகை வெளியேறிய போதும், கார் விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர் கார் நிறுத்தப்பட்டு, புடின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
புடின் தனது இல்லத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததாக மற்றொரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்து விசாரணை நடைபெறுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்வதற்கான இந்த முயற்சி எப்போது நடந்தது என்று தெரியவில்லை.
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி, குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார் என்ற தகவலை அவர் 2017இல் பகிரங்கமாக வெளிப்படுத்தினார் என்பது குறிபிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்,

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
