கருங்கடலில் களமிறங்கிய ரஷ்ய படை! அதிர வைக்கும் புதிய போர் வியூகம்
கருங்கடல் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படை பயிற்சி பெற்ற டொல்பின்களை பயன்படுத்தி, தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள டொல்பின்களின் எண்ணிக்கை ஏப்ரல் முதல் ஜீன் வரை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்களை பிரித்தானிய இராணுவம் மேற்கோள் காட்டியுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்து
இதுதொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், 'கருங்கடல் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படை பயிற்சி பெற்ற டொல்பின்களை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இவை எதிரி டைவர்ஸ்களை எதிர்க்கும் நோக்கம் கொண்டவை. 2022 கோடையில் இருந்து கருங்கடல் கடற்படை, உக்ரைனை ஆக்கிரமிக்க துருப்புகளுக்கு உத்தரவிட்டதில் இருந்து முதல் 200 நாட்களில், ரஷ்யாவின் கடற்படை பாதுகாப்புக்கு பாரிய மேம்பாடுகளை முதலீடு செய்துள்ளது' என தெரிவித்துள்ளது.
முன்னதாக, சோவியத் திட்டத்தில் நீருக்கடியில் எதிரிகளை எவ்வாறு கொல்வது என்பது பற்றிய பயிற்சிகள் டொல்பின்களுக்கு அளிக்கப்பட்டதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |