ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என நிரூபித்துள்ளது: உக்ரைன் கடும் விமர்சனம்-செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிவ்வில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன.
ரஷ்யாவின் கிரீமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் உக்ரைன் தலைநகரில் ஆவேச தாக்குதலை நடத்தியது.
கிவ் நகரை நோக்கி ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் 14 பேர் பலியாகியுள்ளார்கள். 97 பேர் காயம் அடைந்துள்ளனர். கிவ் நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஐ.நா.சபை அவசரமாக கூடியுள்ளது.
போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் உக்ரைன் தூதர் செர்ஜி கருத்து வெளியிடும் போது ரஷ்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அல்லது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நோக்கி தாக்குதல் நடத்துவதன் மூலம் ரஷ்யா, தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இவை வலுவான வழிகளில் தடுக்கப்பட வேண்டும் என உக்ரைன் தூதர் செர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,