தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்டுள்ள புடின்! விதித்துள்ள நிபந்தனை
உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகின்றது.
புடினுடன் பேச்சுவார்த்தை
தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளன.
ரஸ்ய- உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின்(Putin) ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.
புடின் ஒப்புதல்
பேச்சுவார்த்தையில், உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புடின் ஒரு நிபந்தனை வைத்துள்ளார். அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
ஆனால் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.
ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் இராணுவ கைதிகளை விடுவிக்கப்படுவர் . உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ஒப்புதல் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |