உக்ரைன் மக்களுக்காக போப் பிரான்சிஸ் எழுதிய உருக்கமான கடிதம்!
உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையினை தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வருகின்றது.
தற்போது உக்ரைன் ரஷ்ய போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, ரஷ்யா ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
‘மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்’ என ரஷ்யாவின் இந்த தாக்குதலை கண்டித்து உலக நாடுகள் பல தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
போப் பிரான்சிஸ்
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உக்ரைன் மக்களுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாலிய மொழியில் இக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக் கடிதமானது வத்திக்கானால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
"நான் உங்களுடன் நெருக்கமாக இல்லாத ஒரு நாள் கூட இல்லை, உங்களை என் இதயத்திலும் பிரார்த்தனைகளிலும் வைத்திருக்கிறேன்" என்று போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
போரில் இருந்து வெளியேற வேண்டிய உக்ரைனிய இளம் குழந்தைகள் கொல்லப்பட்டமை மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் துன்பங்களை போப் கடிதத்தில் விவரித்துள்ளார்.
மனிதகுலத்தின் தோல்வி
“மனிதகுலத்தின் தோல்வியே” இப்போர் எனவும் போப் கூறியுள்ளார்.
"தங்கள் நாட்டைத் துணிச்சலுடன் காக்க ஆயுதம் ஏந்த வேண்டிய இளைஞர்கள்", கணவனை இழந்த தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இக்கடிதம் அனுதாபத்தை வெளிப்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"தீமையும் வலியும் நிறைந்த இந்தக் கடலில், தொண்ணூறு ஆண்டுகள் பயங்கரமான ஹோலோடோமோர் இனப்படுகொலையிலிருந்து, நான் உங்களின் ஆர்வத்தைப் போற்றுகிறேன். நீங்கள் படும் மகத்தான சோகத்தில் கூட, உக்ரைனிய மக்கள் ஒருபோதும் மனச்சோர்வடையவில்லை அல்லது தங்களைத் தாங்களே விட்டுக்கொடுக்கவில்லை" என்று போப் எழுதியுள்ளார்.
" 1932-1933 ஹோலோடோமோர், அல்லது பயங்கரவாத பஞ்சம், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் செயற்கையாக வடிவமைக்கப்பட்டது, அவர் உக்ரைனிய விவசாயிகளிடமிருந்து உணவுப் பங்குகளை அகற்றினார், இது மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒன்றாகும்” எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வலிமையான மக்கள்
"உலகம் ஒரு தைரியமான மற்றும் வலிமையான மக்களை அங்கீகரித்துள்ளது எனவும் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
துன்பப்பட்டு பிரார்த்தனை செய்யும், அழும் மற்றும் போராடும், எதிர்க்கும் மற்றும் நம்பிக்கை கொண்ட ஒரு மக்கள், ஒரு உன்னத மற்றும் தியாகி மக்கள்," என்று திருத்தந்தை மேலும் உக்ரைன் மக்களை விழித்துள்ளார்.