ரஷ்ய படையினரின் பீரங்கி தாக்குதலினால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி
தெற்கு உக்ரைனின் கொ்சான் மாகாணத்தில் ரஷ்ய படையினா் நடத்திய பீரங்கி தாக்குதலில், பிறந்து 23 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கு இடையே கடந்த 18 மாதங்களாக போா் நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நீப்பா் ஆற்றின் இடது பக்க (கிழக்கு) கரையில் உக்ரைன் படையினா் முகாமிட்டு வருவதாக தகவல் பரவியது.
பாதுகாப்புத் துறை அமைச்சரின் மறுப்பு
ஆனால், இத்தகவலில் உண்மையில்லை என உக்ரைன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் மறுத்தாா். எனினும், இந்தத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ரஷ்ய படையினா் பீரங்கி தாக்குதல் நடத்தினா்.
இந்தத் தாக்குதலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஷிரோகா பால்கா கிராமத்தில் வசித்து வந்த நபா், அவரது மனைவி, 12 வயது மகன், பிறந்து 23 நாள்களே ஆன பெண் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |