ரஷ்ய துருப்புகளுக்கு பதிலடி: தாக்குதலை தீவிரப்படுத்தும் உக்ரைன்
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் மேற்குப் பகுதிகளில் தீவிர போர் இடம்பெற்று வருவதாக ரஷ்ய இராணுவத்தின் பிராந்திய செய்தி தொடர்பாளரான விளாடிமிர் ரோகோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பகுதிகளில் உக்ரைன் படைகள் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே போர் நிலை தீவிரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனிய துருப்புக்கள் அசோவ் பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள ரஷ்ய எல்லைகளைத் தாக்க முயன்றதால், இவ்வாறான தாக்குதல்கள் மேலும் வலு பெற்றுள்ளதாக ரோகோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலந்தின் நடவடிக்கை
இந்நிலையில், ரஷ்ய சார்பு அண்டை நாடுகளில் போர் தொடர்பிலான நிலையற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஒரு தடுப்பாக பெலாரஸுடனான தனது எல்லையைப் பாதுகாக்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகக் போலந்து கூறியுள்ளது.
மேலும், கிழக்கு போலந்தில் உள்ள ஜரிலோவ்காவில், பெலாரஸ் எல்லைக்கு அருகில் சமீபத்தில் நிறுத்தப்பட்ட சில துருப்புக்களுடன் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மரியஸ் பிளாஸ்சாக், சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |