மொஸ்கோ மீது உக்ரைன் தாக்குதல்: ட்ரோன் விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ரஷ்யா முறியடித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் எத்தகைய தாக்குதலும் நடத்தாமல் இருந்தது.
ஆனால் சமீபத்திய மாதங்களில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது தொடர் வான்வழி ட்ரோன் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்து நடத்தி வருகிறது.
❗️ Another drone attack on Moscow#Moscow residents are massively reporting the sounds of an explosion. Moscow Mayor Sobyanin said that a drone was shot down by air defense forces while attempting to fly over Moscow. The wreckage of the UAV fell in the area of Expocenter.
— NEXTA (@nexta_tv) August 18, 2023
Now… pic.twitter.com/HNlgPTsmGQ
ரஷ்யாவை நோக்கி திரும்பும் போர்
இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து பேசிய மேயர் செர்ஜி சோபியானின், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அதன் செயலிழந்த பாகங்கள் நகரின் எக்ஸ்போ மையத்தின் மீது விழுந்து சேதம் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் ரஷ்யாவின் நிலப்பரப்பை நோக்கி திரும்புகிறது, இது தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
இந்த தாக்குதலால் மொஸ்கோவின் Vnukovo விமான நிலையம் சற்று நேரம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.