புலம்பெயர்ந்தோரை போல் ஏமாற்றும் வாக்னர் படையினர்: போலாந்து பிரதமர் எச்சரிக்கை
ரஷ்ய கூலிப்படை குழுவான வாக்னரைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையிலான நிலப்பகுதியை நோக்கி நகர்கின்றனர் என போலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்னர் படையினர் எல்லைகளை கடக்கும்போது தங்களை புலம்பெயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளலாம்.
ரஷ்யாவில் தோல்வியுற்ற இராணுவ எழுச்சியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாக்னர் படையினர் பெலாரஸ் நாட்டில் இருக்கிறார்கள்.
சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு உதவி
வாக்னர் குழுவினர் அநேகமாக பெலாரஷ்யன் எல்லைக் காவலர்களாக மாறுவேடமிட்டு, போலந்து எல்லைக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு உதவுவார்கள்.
அவ்வாறு சட்டவிரோதமாக குடியேறி போலந்திற்குள் ஊடுருவ முயற்சிப்பார்கள், இது கூடுதலான அபாயத்தை உண்டாக்கக்கூடியது.
இந்த ஆண்டு இதுவரை, சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க புலம்பெயர்ந்தோர் சுமார் 16,000 முயற்சிகள் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரால் போலந்துக்குத் தள்ளப்பட்டவர்கள் ஆகும்.
கூட்டு இராணுவ பயிற்சி
பெலாரஷ்ய ஜனாதிபதி லுகாஷென்கோ வாக்னரை தனது நாட்டின் இராணுவப் பயிற்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனால் போலந்து எல்லைக்கு அருகில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளதால் இது மேலும் பதட்டத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடான பெலாரஸ், போலந்து எல்லைப் படைகளை ஒடுக்கும் முயற்சியில் மேற்கு நோக்கி புலம்பெயர்ந்தோரை அனுப்புவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |