ஜேர்மனின் விபரீத முடிவால் அதிரடி இராணுவ நகர்விற்கு தயாராகும் ரஷ்யா (Video)
தற்போது ரஷ்யர்களின் மண்ணில் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை ரஷ்யா அணுவாயுத போராகத் தான் பார்க்கும் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“ரஷ்ய மண்ணில் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை ரஷ்யா அணுவாயுத போராகத் தான் பார்க்கும். அவ்வாறு ஒரு அணு ஆயுத போர் ஏற்பட்டால் அதில் முதலில் பலியாவது ஜேர்மனாக தான் இருக்கும்.
இது தொடர்பில் ரஷ்யாவிற்கான ஜேர்மன் தூதுவர் கூறுகையில் ஜேர்மன் மிக பெரிய தவறை செய்துள்ளது. ரஷ்ய மற்றும் ஜேர்மனுக்கு இடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்க முடியாத அளவுக்கு ஜேர்மன் செயற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
பல புதிய ரக ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்தினாலும் அதனை முறியடிக்க கூடிய ஆயுதங்களை ரஷ்யா பெருமளவில் கொண்டுள்ளது.
பல நாடுகள் நவீன ஆயுதங்களை உக்ரைன் ரஷ்ய போரிற்கு வழங்குகின்றார்களே தவிர அவற்றிற்கு என்ன நடந்தது? அதனால் களமுனையில் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்பதற்கான எந்த தடயமும் இல்லை.”என கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri