கார் குண்டு வெடிப்பில் பலியான ரஷ்ய ஆயுதப்படை தலைவர் : உக்ரைன் புலனாய்வுப் பிரிவில் சந்தேகம்..!
கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 டிசம்பரில் இதேபோன்ற தாக்குதல்
இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING:
— 𝐀𝐋𝐏𝐇𝐀 ® (@Alpha7021) December 22, 2025
🇷🇺:Southern Moscow: Car bomb explodes under Kia Sorento as driver enters vehicle, leaving him in critical condition.
Investigators confirm IED was attached beneath the car; treated as targeted assassination attempt.
Unofficial reports identify the victim as Russian… pic.twitter.com/tefY4S8ifZ
எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 டிசம்பரில் ஒரு உயர் ரஷ்ய இராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதலுக்கு உக்ரைனின் பாதுகாப்பு சேவை பொறுப்பேற்றது.
இராணுவத்தின் அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், கியேவ் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய மறுநாளே, அவரது அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |