உக்ரைனின் அணுமின் ஆலையை கைப்பற்றிய ரஷ்ய படையினர்! கப்பல் கடலில் மூழ்கியது (காணொளி)
உக்ரைனின் ஸபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் "செயல்பாட்டு பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலையின் மீது நடத்தப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக, அந்த ஆலையில் தீப்பரவல் ஏற்பட்டது.
எனினும் பின்னர் அந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலேயே ரஸ்ய படையினர், ஆலையை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில் உக்ரைன் கடற்பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் சரக்குக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக கப்பலின் எஸ்டோனிய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது கப்பலில் இருந்த ஆறு பேரும் பின்னர் உள்ளூர் உக்ரேனிய மீட்பு சேவையால் மீட்கப்பட்டனர்.
பனாமா கொடியிடப்பட்ட கப்பல் எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட விஸ்டா ஷிப்பிங் ஏஜென்சிக்கு சொந்தமானது.
எனினும் இந்தக்கப்பலின் வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam