ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைன் ஆக்கிரமிக்கப்படுகிறது!..புடின் அதிரடி
மக்களை பாதுகாக்கவே உக்ரைனுடன் (Ukraine) போரினை மேற்கொள்வதாக ரஷ்யாவின் (Russia) ஜனாதிபதி விளாடிமீர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புடின், இராணுவ அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளை நோக்கி ரஷ்யா நகரவில்லை, மாறாக நேட்டோ கூட்டமைப்பே ரஷ்யாவை நோக்கியதாக நகர்வுகளை மேற்கொள்கின்றது.
உக்ரைனிய இராணுவ வீரர்கள்
அத்துடன், போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை உக்ரைனிய இராணுவ வீரர்கள் மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
F-16 ரக விமானங்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள உயர்தரத்திலான ஓடுபாதைகள் தேவை.
மேலும் ஜெட் விமானங்கள் வந்தவுடன் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்தும் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |