உக்ரேனிய போர் கைதிகளின் இறப்புக்கு காரணம் தெரிவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்
உக்ரைன் - டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஸ்யாவின் தாக்குதலினால் இறந்த உக்ரேனிய போர் கைதிகளின் இறப்புக்கு காரணமான சிறைசாலை ஏவுகனை தாக்குதல் தொடர்பில் ரஷ்யாவும் உக்ரைனும் ஒன்றையொன்று குற்றம் சுமத்தியுள்ளன.
சித்திரவதை மற்றும் கொலைக்கான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சிறையானது ரஷ்யாவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றம் சுமத்துதல்
எனினும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கிமார்ஸ் ஏவுகனைகள் மூலம் உக்ரேனிய படையினரால் இந்த சிறை தாக்கப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது.
சிறைச்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், சிறைச்சாலையானது தீ வைக்கப்பட்ட கட்டிடத்தை போல் இருப்பதாகவும் ஏவுகணை தாக்குதலால் உடல்கள் சிதறியிருக்கலாம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்த, சிறைச்சாலையில் மரியுபோலின் கடைசி பாதுகாவலர்களாக இருந்த அசோவ் படைப்பிரிவினரும் இருந்ததாக உக்ரைன் கூறியுள்ளது.
அதிகளவானோர் இறப்பு
ரஷ்யா தம்மை புதிய நாசிசவாதிகள் என்றும், போர் குற்றவாளிகளெனவும் சித்தரிக்க முயன்றதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் சட்ட மா அதிபர் திணைக்கள தகவல்படி சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 130 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பளத்தை செலுத்துவதில் சிக்கல்:விற்பனை செய்யப்படும் லேக் ஹவுஸ்:ஹோட்டலாக மாற்றும் ஜனாதிபதியின் திட்டம் |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
