தன்னை தானே சுட்டுக்கொண்டு மூளையை சிதறடிக்க முனையும் புடின்: இந்திய ஆய்வாளர் கருத்து(Video)
ரஷ்ய ஜனாதிபதி புடின், கடந்த வருடம் உக்ரைன் மீது ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டு மூன்றாவது நாள், அணுவாயுதங்களை அடிப்படையாக வைத்து ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.
ரஷ்யாவின் அணுவாயுதப் படையை தயார் நிலையில் இருக்கும்படி தாம் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த புடின், உக்ரைன் விடயத்தில் யாராவது தலையிட்டால் அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத பதிலடியை ரஷ்யாவிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அப்பொழுது முதல் ரஷ்யா, தாம் அணுவாயுதங்களைப் பாவிக்கப்போவதாக அடிக்கடி எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கின்றது.
ரஷ்யா அடிக்கடி வெளியிட்டுவந்த அனுவாயுத எச்சரிக்கைகள் தொடர்பான பல கேள்விகள், சந்தேகங்கள் தொடர்ந்து பொதுப்பரப்பில் உலாவந்தபடியேதான் இருக்கின்றன.
உக்ரைன் ரஷ்ய யுத்தத்தில், ரஷ்யா அணுவாயுதங்களைப் பாவிக்குமா? உக்ரைன் களமுனைகளில் இதுவரை ரஷ்யா ஏன் அணுவாயுதங்களைப் பயன்படுத்தவில்லை? ரஷ்யா அணுவாயுதத் தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோ எப்படியான பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தான் இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி தேடுவதற்கு முயல்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |