பெலரூஸைப் போருக்குள் இழுக்க முயற்சிக்கும் ரஷ்யா - உக்ரைன் அதிர்ச்சி தகவல்
ரஷ்யா அதன் தோழமை நாடான பெலரூஸைப் போருக்குள் இழுக்கப் பார்க்கிறது என்று உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
G7 தொழில்வள நாடுகளுடனான சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உக்ரேன் பெலரூஸ் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கூறி ரஷ்யா அந்நாட்டைப் போருக்குள் இழுக்கப் பார்க்கிறது என்று ஸெலென்ஸ்கி கூறினார்.
பெலரூஸ் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்
பெலரூஸ் அதன் போர்த் தயார்நிலையை ஆராயும் நோக்கத்தில் உக்ரேனுடனான எல்லைப் பகுதிக்குத் துருப்புகளை அனுப்பியுள்ளது. அங்கு ரஷ்யத் துருப்புகளுடன் பயிற்சி நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
உக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யத் துருப்புகளுக்கு, பெலரூஸ் அதன் நிலப் பகுதியைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. இருப்பினும் போரில் பங்கேற்கச் சொந்தத் துருப்புகளை அது அனுப்பியதில்லை.
பெலரூஸ் மீது தாக்குதல் நடத்தத் திட்டம் இருப்பதை உக்ரேன் மறுத்துள்ளது.
அந்நாட்டிலிருந்து மிரட்டல் இல்லை என்பதை உறுதிசெய்வதற்கு எல்லைப் பகுதியின் பாதுகாப்பு நிலவரத்தைக் கண்காணிக்கும்படி
ஸெலென்ஸ்கி தொழில்வள நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.