"ரஷ்ய பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டம்"
மாதாந்தம் 5,000 ரஷ்ய பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலங்கை தூதரகம் ஏற்கனவே தொடர்ச்சியான விளம்பர பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளம்பர பிரசாரங்கள்

அதன்படி, மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதுக்குழு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட முக்கிய ரஷ்ய நகரங்களில் பல விளம்பர பிரசாரங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றிற்கு, இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் 2ஆம் திகதி இடைகால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தே, ரஷ்ய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திற்கு இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க தடையுத்தரவை பிறப்பித்திருந்தார்.
விமான பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அத்துடன், ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனால், ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்த சுற்றுலா பயணிகளை ரஷ்யா மீள அழைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் கொழும்பு மற்றும் மொஸ்கோவிற்கு இடையில் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல் |