போர் பதற்றத்திற்கு மத்தியில் இராணுவ ஒத்திகையில் ஈடுடவுள்ள ரஷ்யா
உக்ரைன் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியில் குறிப்பிடப்படாத நாடுகளின் துருப்புக்களுடன் ரஷ்யா இராணுவ ஒத்திகை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் கிழக்கில் பரந்த அளவிலான இராணுவ ஒத்திகைகளை நடத்தும் என்று ரஷ்யாவின் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை திட்டமிடப்பட்டுள்ள வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது கிழக்கு இராணுவ மாவட்டத்தின் 13 துப்பாக்கிச் சூடு எல்லைகளில் துருப்புக்களை ஈடுபடுத்தும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வான்வழி துருப்புக்கள், நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் இராணுவ சரக்கு விமானங்களின் பிரிவுகளும் இராணுவ ஒத்திகைகளில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படாத வெளிநாடுகளின் துருப்புக்கள் பங்கேற்கும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட பயிற்சிகள் எதையும் இரத்து செய்யவில்லை
ரஷ்ய மற்றும் சீன துருப்புக்கள் கடந்த ஆண்டு தொடர்ச்சியான கூட்டு இராணுவ ஒத்திகைகளில் பங்கு பெற்றன, இது மொஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான நெருக்கமான இராணுவ உறவுகளை பிரதிபலிக்கிறது.
உக்ரேனில் தனது படைகளை பலப்படுத்த படைகளை அணிதிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்தது. ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதி மட்டுமே சிறப்பு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது" என்று குறிப்பிட்டது.
விவரங்களை வெளியிடாமல், உக்ரைனில் செயல்படும் துருப்புக்களின் எண்ணிக்கை பணிகளை நிறைவேற்றுவதற்கு போதுமானது என்று அமைச்சகம் கூறியது.
எவ்வாறாயினும் திட்டமிட்ட பயிற்சிகள் எதையும் இராணுவம் இரத்து செய்யவில்லை என்று வலியுறுத்தியது.
உக்ரைனில் எத்தனை மில்லியன் சிப்பாய்கள் இராணு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ரஷ்யா அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.