ஜெலன்ஸ்கிக்கு பேரிடி! கருங்கடலில் குவியும் ரஷ்ய போர்க்கப்பல்கள்
உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி Andriy Yermak ரஷ்யா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய கருங்கடலில், பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா அச்சுறுத்திவருவதாகவும் பயங்கரவாதிகளின் இத்தகைய செயல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கடல்சார் சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறி ரஷ்ய போர்க்கப்பல்கள் கருங்கடலில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியின் தரகு ஒப்பந்தம்
கடந்த வாரம், கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஐ.நா மற்றும் துருக்கியின் தரகு ஒப்பந்தத்தை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வந்தது.
அதுமட்டுமின்றி, உக்ரைனிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் ரஷ்ய இராணுவ இலக்குகளாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தரப்பில் வெளியான மற்றொரு அறிக்கையில், உக்ரைன் துறைமுகத்திற்கு அருகே ஒரு சிவிலியன் கப்பலுக்கு எதிராக ரஷ்ய போர்க்கப்பல் விடுத்த அச்சுறுத்தலை இடைமறித்ததாக உக்ரைனின் எல்லைக் காவலர் சேவை கூறியது.
கப்பலின் பெயர் மற்றும் துறைமுகம் பற்றிய தகவலை உக்ரைன் வெளியிடப்படவில்லை.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
