ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு:ரணில்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான யுத்தம் இலங்கை தேயிலை தொழிற்துறையை பாதிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கீழ் மற்றும் மத்திய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவோ பிரித்தானியாவோ ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்தால், இலங்கை ரஷ்யா அல்லது வேறு நாடுகளுடனான வர்த்தங்களை நிறுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல்கள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆசியா உலகில் வல்லரசுகள் அமைந்துள்ள கண்டமாக உருவவெடுக்கலாம் எனவும் ரணில் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam