ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் பதற்றம் - இலங்கையர்கள் தொடர்பில் அறிக்கை கோரல்
ரஷ்யாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவசர அறிக்கை ஒன்றை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்திடமே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சுமார் 1500 இலங்கையர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 1000 பேர் கல்வி நோக்கத்திற்காக அங்கு சென்ற மாணவர்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சியவர்கள் அந்நாட்டில் வேலை செய்கிறார்கள், அவர்களில் சிலர் அந்த நாட்டில் வசிக்கிறார்கள். எவ்வாறாயினும், நாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இதுவரை எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கூலிப்படையான வாக்னர் ஆயுதக் குழுவானது கிளர்ச்சியைத் தொடங்கிய போது, ரஷ்யாவில் வாழும் இலங்கையர்கள் மீது வெளிவிவகார அமைச்சின் உடனடி கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri