27 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய யூனியன்!
27 நாடுகளில் உள்ள 45 கோடி மக்கள் அடுத்த 72 மணி நேரத்திற்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்று நேட்டோ (NATO) பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரித்திருக்கின்றார்.
உக்ரைனுக்கும்-ரஷ்யாவுக்கு இடையே நடந்து வரும் போர் ஐரோப்பிய யூனியன் வரை விரிவடையும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியன்
இந்த நிலையில் உக்ரைனின் சுமி (Sumy) நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட போது 10ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலே ஐரோப்பிய யூனியன் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நேட்டோவின் மார்க் ருட்டே கூறுகையில், ரஷ்யா 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவில் மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தும். போலந்து போன்ற சிறிய நாடுகள் மீது கூட ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 'நெருக்கடி மேலாண்மை ஆணையர்' ஹாட்ஜா லஹ்பிப் கூட இதே அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கலிபர்' ரக ஏவுகணை
ஜப்பான் கடலில் உள்ள "Ufa" என்ற ரஷ்ய ஆயுத நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள "Khabarovsk" எனும் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்திருக்கிறது.
இதில் 'கலிபர்' ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணையின் அதிகபட்ச தாக்குதல் தொலைவு 1500-2500 கி.மீ என சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த ஏவுகணை 4,500 கி.மீ தொலவில் உள்ள இலக்கை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வகை ஏவுகணையில் சுமார் 450 கி.கி வெடி பொருள் இருக்கும். ஏவுகணை தாக்கும் பகுதியில் 50-100 மீ சுற்றளவில் புல் பூண்டு கூட முளைக்காது.
இந்த ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 2500 கி.மீ என்பதால் சுமார் 27 ஐரோப்பிய நகரங்களை இதனால் தாக்க முடியும். சுமார் 27 ஐரோப்பிய நகரங்களை ரஷ்ய ஏவுகணை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
எனவேதான் ஐரோப்பிய யூனியன் போர் தொடர்பாக இவ்வாறு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
