ஐதராபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி
ஐபிஎல் 2025 தொடரின் 7ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இன்றைய போட்டி ஐதராபாத்தில் இன்று(27) நடைபெற்றது.
ஐதராபாத் அணி
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது.
டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 47 ஓட்டங்கள் அனிகெட் வர்மா 36 ஓட்டங்களும், நிதிஷ் ரெட்டி 32 ஓட்டங்களும், கிளாசன் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் , ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
லக்னோ அணி
இதையடுத்து, 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் ஒரு ஓட்டங்கள் பெற்று வெளியேறினார். மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கலஸ் பூரன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆடினார்கள். நிகோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் இறங்கிய அப்துல் சமத் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
