முன்கூட்டிய வருமான வரி விதிக்கப்படுவோருக்கான அறிவிப்பு
வட்டி வருமானம் ஈட்டும், ஆனால் வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத, AIT என்ற முன்கூட்டிய வருமான வரி விதிக்கப்பட வேண்டியவர்களுக்கான, நடைமுறையை கோடிட்டுக் காட்டும் புதிய சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2025 மார்ச் 28 அன்று திகதியிட்ட வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
இதன்படி, ஆண்டுக்கு மொத்த மதிப்பீடு செய்யக்கூடிய வருமானம் 1.8 மில்லியன்களுக்கு மிகாமல், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து வட்டி சம்பாதிப்போர், 10வீத முன்கூட்டியே வருமான வரி விலக்கிலிருந்து நிவாரணம் கோர சுய வெளிப்படுத்ததலை சமர்ப்பிக்கலாம்.
திறைசேரியின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை, குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன் இது உள்நாட்டு வருமான சட்டத்தில் முறையான திருத்தங்களுக்கு உட்பட்டது என்று இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
