போர் பரபரப்பிற்கு மத்தியில் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா
ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே எரிவாயு கொண்டு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் முற்றிலும் மூடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, பெரிய குழாய் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான Gazprom, Nord Stream 1 குழாய் வழி மீதான கட்டுப்பாடுகள் அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. ரஷ்யா ஏற்கனவே குழாய் வழியாக எரிவாயு ஏற்றுமதியை கணிசமாகக் குறைத்துள்ளது.
எவ்வாறாயினும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
மோசமான எரிசக்தி நெருக்கடி
உக்ரைன் போரை கண்டித்து ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவை ரஷ்ய கூட்டமைப்பிற்கு எதிராக பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனை எதிர்க்கும் விதமாக ரஷ்யாவும், பொருளாதார தடைகளை விதித்த நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பெருமளவு குறைந்தது.
இவை ஐரோப்பிய நாடுகளில் மோசமான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய நாடுகளும் இடையே எரிவாயு கொண்டு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம்1 குழாயை ரஷ்யா மூடியுள்ளது.
இதுத் தொடர்பாக ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் தெரிவித்துள்ள தகவலில், நார்ட் ஸ்ட்ரீம் 1 ஸ்டேஷன் பராமரிப்பு பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மூடப்பட்ட இந்த நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாயினால், ஜேர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயு வழங்கப்படாது என தெரிய வந்துள்ளது.
2V62X
விநியோகங்களுக்கு எதுவும் தடையாக இல்லை
விநியோக மறுதொடக்கம் செய்யப்படுவதற்கு ரஷ்யா உத்தரவாதம் அளிக்குமா என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்விடம் கேட்டபோது, தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர, விநியோகங்களுக்கு எதுவும் தடையாக இல்லை என்பதற்கு உத்தரவாதங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் பால்டிக் கடலின் கீழ் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ரஷ்ய கடற்கரையிலிருந்து வடகிழக்கு ஜெர்மனி வரை 1,200 கிமீ (745 மைல்கள்) நீண்டுள்ளது.
இது 2011 இல் திறக்கப்பட்டது, மேலும் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 170 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.