உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்யா! போக்குவரத்து தற்காலிகமாக தடை
ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைக்கும் கெர்ச் பாலம் அருகே உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கிரிமியா பாலம் சேதமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் தலைவர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார்.
கெர்ச் பாலத்தில் இருந்து வெள்ளை புகை வெளியேறி வருவதனால் பாலத்தின் மீதான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அக்டோபரில் எரிபொருள் டேங்கர் வெடித்து, சாலையின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததால், பாலம் பகுதியளவு அழிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு ரஷ்யா உக்ரைனை குற்றம்சாட்டியுள்ளதுடன், இது உக்ரைன் பாதுகாப்பு சேவைகளின் 'நாசவேலை' என்று புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |