தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைனின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் கிரிமியா அருகே 20 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் கிரிமியா தீபகற்பம் அருகே ரஷ்யா தனது தாக்குதலை முடுக்கியுள்ள நிலையில், அப்பகுதியில் உக்ரைனின் 20 ஆளில்லா விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது.
14 ஆளில்லா விமானங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளாலும், 6 எலக்ட்ரானிக் போர்களாலும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்
இந்த தாக்குதலில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மாஸ்கோவிற்கு தென்மேற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலுகா பகுதியிலும் ஒரு ஆளில்லா விமானம் இடைமறிக்கப்பட்டதாக ஆளுநர் விளாடிஸ்லாவ் ஷப்ஷா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாஸ்கோ தலைநகரை இலக்காகக்கொண்ட ஆளில்லா விமானத்தை வெள்ளிக்கிழமை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |