ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது
ஸபோரிஸியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய பாதுகாவலர்களுடன் இடம்பெற்ற கடுமையான மோதலின் போது அணுமின் நிலைய கட்டடம் தீப்பிடித்தது.
இதனை தொடர்ந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனின் வலுசக்தி கேள்வியில், 25 சதவீதத்தை ஸபோரிஸியா அணுசக்தி நிலையம் பூர்த்தி செய்கிறது.
இது குறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவராண்மை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஸபோரிஸியா அணுசக்தி நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan