ரஷ்யாவின் இரக்கமற்ற செயல்: குடியிருப்பு பகுதியில் குண்டுமழை - மக்களின் அவலநிலை
உக்ரைன் ரஷ்ய இடையே யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரைன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா சரமாரிக் குண்டு தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கிய போதிலும், தொடர்ந்து 5ஆவது நாளாக ரஷ்யா போர் இடம்பெற்றுவருகிறது.
பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையிலும், உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது.
#Kharkov under continuous shelling of enemy multiple launch rocket systems pic.twitter.com/FNbuPpFYlN
— NEXTA (@nexta_tv) February 28, 2022
இந்த தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இத்தாக்குதலில் சிக்கி மக்கள் வீதியில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் சரமாரியாக ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளும் ராக்கெட் ஒன்று சாலையில் சொருகி நிற்கும் காட்சியும், தாக்குதலில் முதியவர் ஒருவர் காலை இழந்து இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருக்கும் கோர காட்சிகளும் வெளியாகியுள்ளது.