335 பயணிகளுடன் இலங்கை வந்தது அஸூர் எயார் விமானம்
ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் விமானம் இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானம் 335 பயணிகளுடன் சற்றுமுன் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான விமான சேவைகள்
ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் மற்றும் பிரான்சின் எயார் பிரான்ஸ், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, அஸூர் எயார் இன்று (03.11.2022) முதல் இலங்கைக்கான விமானங்களைத் முன்னெடுக்கும் அதேவேளையில் எயார் பிரான்ஸ் நாளை (04.11.2022) முதல் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் சேவை முன்னெடுப்பு
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மே 2023 வரை வாராந்திர விமானங்களுடன் மீண்டும் இலங்கைக்கான தமது சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
இது இந்த பருவ காலத்தில் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
