ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியை தூண்டும் புதிய புத்தகம் வெளியீடு
ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்காக நடப்பு ரஷ்ய-உக்ரைன் போரை உள்ளடக்கிய வரலாற்று பாடப்புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தகம் 1945 முதல் 21 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தை உள்ளடக்கியதோடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும்" இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாதங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகம் ரஷ்யாவில் மிகவும் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட புத்தகமாக மாறியுள்ளது.
இந்த புத்தகத்தில் 2014 முதல் தற்போது வரை சிறப்பு இராணுவ நடவடிக்கை உட்பட புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புத்தகம் வெளிப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு தேசபக்தியை தூண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.