கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா: உலக நாடுகள் அதிர்ச்சியில்
உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட கருங்கடல் தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷ்ய விலகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று பல மாதங்களாக ரஷ்யா கூறி வந்தது.
இந்நிலையில் கருங்கடல் நிபந்தனைகளை உலக நாடுகள் செயல்படுத்தாத காரணத்தினால் அதிலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கருங்கடல் தானிய ஒப்பந்தம்
உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் 'கருங்கடல் தானிய ஒப்பந்தம்'எற்படுத்தப்பட்டது. தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடக உக்ரைன் காணப்படுகிறது.
உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய - உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டன.
இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உலகளவில் உருவாகியது.
இதனால் கடந்த வருடம் ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியின் முயற்சியால் ரஷ்யா-உக்ரைன் மோதலால் தேக்கி வைக்கப்பட்ட உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் "கருங்கடல் தானிய ஒப்பந்தம்"எற்படுத்தப்பட்டது.
பயங்கரவாத தாக்குதல்
ரஷ்யாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷ்யாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
"ஒப்பந்தங்கள் நிறைவேறியவுடன், மீண்டும் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்போம்' என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த முடிவிற்கு ரஷ்யா- கிரிமியா இடையே உள்ள பாலத்தின் மீது இரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், உக்ரைன் மீது குற்றம் சாட்டியதற்கும் தொடர்பில்லாதது' என்று அவர் மேலும் கூறி உள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பே, ஜனாதிபதி புடின் இந்த முடிவை அறிவித்தார் என பெஸ்கோவ் கூறி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |