உக்ரைனின் பகுதிகளை பகிரங்கமாக உரிமைக்கோரிய ரஷ்யா!
இஸ்தான்புல்லில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், ரஷ்யாவால் உரிமை கோரப்படும் அனைத்து உக்ரைன் பகுதிகளிலிருந்தும் அந்நாடு தனது துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் இந்தகோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய தலைவர்களிடம் இருந்து அதிருப்தியையும் பெற்றுள்ளது.
எனினும் துருக்கியில் நடந்த கூட்டத்தில் ரஷ்யா முன்வைத்த விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க உக்ரைன் மறுத்துவிட்டது - ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு சில வாரங்களுக்குப் பிறகு, (மார்ச் 2022) இரு தரப்பினரும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
1,000 போர்க் கைதிகள்
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இரு தரப்பிலும் மொத்தமாக 1,000 போர்க் கைதிகளை பறிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
