உக்ரைனை இருளில் மூழ்கடிக்க திட்டமிடும் ரஷ்யா
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக கருதப்படும் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து உக்ரைனுக்கான மின் இணைப்பை மொத்தமாக துண்டிக்க ரஷ்யா நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கையால் குறித்த அணுமின் நிலையமானது பெரும் விபத்தை சந்திக்கக் கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் உக்ரைனின் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர்.
தீவிரமாக பணியாற்றி வரும் ரஷ்ய பொறியாளர்கள்
இது தொடர்பில் Petro Kotin தெரிவிக்கையில், ரஷ்ய பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், இது ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து உக்ரைனுக்கான மின் இணைப்பை மொத்தமாக துண்டிக்கும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஷ்ய பகுதிக்கு இணைப்பு ஒன்றை புதிதாக முன்னெடுக்கவும் செயல்படுவதாக Petro Kotin தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பொறியாளர்கள் தங்கள் திட்டப்படி செயல்படுவார்கள் எனில், இது ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் அமைப்புகளின் பேரழிவுகரமான தோல்விக்கு வழிவகுக்கும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புகலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணுமின் நிலையம்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ஜாபோரிஜியா அணுமின் நிலையமானது ரஷ்ய துருப்புகலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவர்கள் உக்ரைன் ஊழியர்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதுடன், ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு உரிய தகவலை அளிப்பதை தடுத்தும் வருகின்றனர்.