மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மையை ஆயுதமாக்க திட்டமிட்ட ரஷ்யா
ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மை நோயை ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா 1990 வரை குரங்கம்மை வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த திட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி கனாட் அலிபெகோவ் (Kanat Alibekov) கூறியதாக பிரித்தானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கென்னத் அலிபெக் (Kenneth Alibek) என்றும் அழைக்கப்படும் கனாட் அலிபெகோவ், 1991-ஆம் ஆண்டு சோவியத் வீழ்ச்சியடையும் வரை சோவியத் ஒன்றியத்தின் உயிரி ஆயுத (bioweapon) நிபுணராக இருந்தவர். பின்னர், அவர் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார்.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1998-ஆம் ஆண்டு அமெரிக்க இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதப் பரவல் தடை திட்டத்திற்கு (CBWNP) அளித்த நேர்காணலில், 40 வசதிகளுக்கு மேல் 32,000 பணியாளர்களை மேற்பார்வையிட்டதாகக் கூறப்படும் அலிபெகோவ், சோவியத் நாட்டில் வைரஸ்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யா அதன் பழைய திட்டத்தை இப்போது மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"எனவே, மனித பெரியம்மைக்கு (Smallpox) பதிலாக என்ன வைரஸ்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை தீர்மானிக்க ஒரு சிறப்பு திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். பெரியம்மைக்கான மாதிரியாக தடுப்பூசி வைரஸ், mousepox வைரஸ், rabbitpox வைரஸ் மற்றும் குரங்கம்மை (Monkeypox) வைரஸ் ஆகியவற்றை நாங்கள் சோதித்தோம்.
இந்த மாதிரி வைரஸ்களைப் பயன்படுத்தி அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் நடத்தப்படும் என்பது யோசனை. அதேபோல், எங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் மரபணு மாற்றப்பட்ட பெரியம்மை வைரஸ் உருவாக்கி வைத்திருந்தோம்.
சோவியத் ஒன்றியத்தின் முடிவிற்குப் பிறகு, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் எதிர்கால உயிரியல் ஆயுதங்களை உருவாக்க குரங்கம்மை வைரஸை தொடர்ந்து பயன்படுத்துவதை திட்டமாக வைத்திருந்தது" என்று விஞ்ஞானி மேலும் கூறினார்.
அதே ஆண்டு, அவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸின் விசாரணைக்கு முன் கொண்டுவரப்பட்டார், அங்கு அவர் "ரஷ்யாவின் உயிரியல் ஆயுதங்கள் திட்டம் முழுமையாக அகற்றப்படவில்லை என்று உறுதியாக நம்புவதாக" கூறினார்.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri