திடீரென இந்தியாவிற்கு திசைமாற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்
சீனாவை நோக்கி பயணம் செய்த ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றி இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னணியில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளதுதான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
“Aqua Titan” என்ற ரஷ்ய எண்ணெய் கப்பல், பால்டிக் கடல் துறைமுகத்தில் இருந்து ஜனவரி இறுதியில் ஏற்றிய Urals வகை எண்ணெயுடன் தற்போது இந்தியாவின் நியூ மங்களூரை நோக்கி பயணம் செய்கிறது.
இந்த கப்பல் மார்ச் 21ஆம் திகதி இந்தியாவை அடையும் என அந்நாட்டு கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. முதலில் சீனாவின் ரிசாவோ துறைமுகத்தை இலக்காகக் குறிப்பிட்டிருந்த இந்த கப்பல், தென்கிழக்கு ஆசிய கடற்பகுதியில் மார்ச் மாத நடுப்பகுதியில் திசைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹோர்முஸுக்கு அருகில் மாபெரும் குண்டுகளால் தாக்குதல்.. பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்
மத்திய கிழக்கு பதற்றம்
அமெரிக்கா, இந்தியாவுக்கு தற்காலிகமாக ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க அனுமதி வழங்கிய சில நாட்களுக்குப் பிறகே இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக ஈரான் போரால் ஏற்பட்ட விநியோக சிக்கல்களை சமாளிக்க இந்தியா ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அந்த அனுமதிக்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் இந்தியா சுமார் 30 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளது.
இதனையடுத்து, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan