ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி! ஜெலென்ஸ்கி கடும் கண்டனம்
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்
உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை தாக்கிய சுமியில் இருந்த இடிபாடுகள் மாலையில் தான் அகற்றப்பட்டன. பயங்கரவாதிகள் நகரின் கல்வி நிறுவனம் ஒன்றை தாக்கியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்...அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல் என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், கல்வி கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |