உக்ரைன் மீது ரஷ்யா பாரிய இணையவெளித் தாக்குதல் - பல சேவைகள் முடக்கம்
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் சைபர் தாக்குதலால், உக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உக்ரேன் அரசாங்க சேவைகள் பெரிய அளவிலான DDoS தாக்குதல்களால் சீர்குலைவது இது இரண்டாவது முறையாகும், இணையத்தளங்களை ஊடுருவும் ரஷ்ய ஹேக்கர்ல்கள் பெரிய கணினி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகளில் அனுப்புகின்றனர்.
கடந்த வாரம், வங்கிகள் மற்றும் அரசாங்க வலைத்தளங்கள் இதே போன்ற சம்பவத்தை சந்தித்தன, இது நாட்டில் மிகப்பெரிய DDoS தாக்குதல் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.