இரவோடு இரவாக அதிரடி காட்டிய ரஷ்யா.. ஏற்பட்டுள்ள திடீர் பரபரப்பு
உக்ரேனிய வான் பரப்பிற்குள் ரஷ்யா நேற்றிரவு 273 ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனிய விமானப்படை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நேற்றிரவு உக்ரைனிய வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கிட்டத்தட்ட 273 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்
அதிகரிக்கும் பதற்றநிலை
இந்த ட்ரோன்கள் ரஷ்யாவின் குர்ஸ்க், ஓரல், மில்லெரோவோ மற்றும் ப்ரிமோர்ஸ்கோ-அக்தார்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்து ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல அடுக்கு வான் பாதுகாப்பு உத்திகளை பயன்படுத்தி ரஷ்யா முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலை முறியடித்து இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏவப்பட்ட 273 ரஷ்ய ட்ரோன்களில் 252 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும், செயலிழக்க செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 21 ட்ரோன்கள் பாதுகாப்பு வளையங்களை தாண்டி சென்று 18 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைமை! மொஜ்தபா கமேனி இறந்திருக்கலாம்.. மீண்டும் ட்ரம்பின் அறிவிப்பு