சுதந்திர தினத்தின் போது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை - உலக செய்திகள் (Video)
உக்ரைனின் சுதந்திர தினம் நெருங்கிவருகையில் அந்த காலப்பகுதியில் ரஷ்யா பயங்கர தாக்குதலை நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 24 அன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
அதேசமயம் அந்த திகதியில் உக்ரைன் மீது ரஷ்யா மோசமான தாக்குதல்களை நடத்த திட்டமிடலாம் என கணிக்கப்படுகிறது.
இது குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “இந்த வாரம் ரஷ்யா அசிங்கமான, கொடூர தாக்குதல் நடத்த திட்டமிடலாம். இதை நாம் அறிந்திருக்கும் நிலையில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
உக்ரைன் தனது சிறிய படையையும், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவையும் திரட்டி ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,