ரஷ்ய இராணுவத்திற்கு மூன்று டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த ரஷ்ய-இந்திய நட்புறவு சங்கம்
ரஷ்யா-இந்தியா நட்புறவு சங்கமான ‘திஷா’, மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பட்ட மருந்து பொருட்கள்
மனிதாபிமான உதவியாக மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், குர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆயுதப்படைகளின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதில் இந்திய மருந்து நிறுவனமான பன்பியோ பார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கும்.
ரஷ்ய - உக்ரைன் மோதல் நடந்து வரும் சூழலில், பலதரப்பு கொள்கையின்படி இந்தியாவின் சமநிலையான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.
மறுபுறம், தற்போதைய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதாக ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடர்பாக இந்தியா "மிகவும் சமநிலையான நிலைப்பாட்டை" எடுத்து வருவதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த உதவி, இரு நாட்டு மக்களையும் இணைக்கும் விடயமாக பார்க்கப்படுகிறது.
விடுதலை புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்: பற்ரிக் பிரவுண் |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
