ரஷ்யாவின் புதிய ஆயுதம் - புட்டின் விளக்கம்
நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், உண்மையிலேயே அந்த நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால்தான் நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய முடியாமல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் இப்போது அமோதித்தால் கூட, நாா்ட் ஸ்ட்ரீம்-2 குழாய் வழித்தடம் மூலம் உடனடியாக எரிவாயு விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்ற ரஷியப் படை, அந்தப் பிராந்தியத்தில் இன்னும் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி வருகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
